அரசு ஊழலை விசாரிக்க தனிக்குழு; பாஜ அறிவிப்பால் கெஜ்ரிவால் கொதிப்பு BJP Manifesto 2.0
அரசு ஊழலை விசாரிக்க தனிக்குழு; பாஜ அறிவிப்பால் கெஜ்ரிவால் கொதிப்பு BJP Manifesto 2.0| Delhi Elections| Bjp promises டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நடக்கிறது. ஆட்சியை பிடித்து விடும் நோக்கில் 3 கட்சிகளும் போட்டி போட்டு இலவச வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. பாஜ தமது தேர்தல் வாக்குறுதியின் முதல் பாகத்தை அதன் தலைவர் நட்டாஏற்கனவே வெளியிட்டார். அதில் கேஸ் மானியம் 500 ரூபாய், கர்ப்பிணிகளுக்கு 21,000, சீனியர் சிட்டிசன்கள் பென்ஷன் உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் இலவச இடம் பெற்று இருந்தன. தற்போது பாஜ தேர்தல் அறிக்கையின் 2ம் பாகம் அறிவிக்கப்பட்டது. எம்பி அனுராக் தாகூர் வெளியிட்டார். இதிலும் இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. தேவையுள்ள ஏழை மாணவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் கேஜி வகுப்பு முதல் முதுகலை வரை இலவச கல்வி வழங்கப்படும். போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் ஏழைகளுக்கு ஒருமுறை 15000 ரூபாய் வழங்கப்படும். 2 முறை பயண கட்டணம் மற்றும் விண்ணப்ப கட்டணம் திருப்பி செலுத்தப்படும். அம்பேத்கர் உதவித்தொகை யோஜனா திட்டத்தில், எஸ்சி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். வீட்டு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். அவர்களுக்கு 10 லட்ச ரூபாய் ஆயுள் காப்பீடு, 5 லட்ச ரூபாய் விபத்து காப்பீடு, குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை; வாகன காப்பீடு, பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுமுறை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்த தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் பற்றி விசாரிக்க பூஜ்ய சகிப்புதன்மை கொள்கையுடன் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என பாஜ வாக்குறுதி அளித்துள்ளது. பாஜ வாக்குறுதிகளை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். முதல் அறிக்கையில் மொஹல்லா கிளினிக்குகளை மூடுவதன் மூலம் இலவச சிகிச்சையை முடிவுக்கு கொண்டு வருவதாக பாஜ சொன்னது. இப்போது, இலவச கல்வியை நிறுத்துவோம் என்கிறார்கள். தேவை உள்ள மாணவர்களுக்கு மட்டும் இலவச கல்வியை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். பாஜ ஆபத்தான கட்சி. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் கும்பங்களின் பட்ஜெட்டை எகிற வைத்து விடுவார்கள் என கெஜ்ரிவால் கூறினார்.