செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி | Annamalai | Selvaperunthakai | Kachchatheevu
செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி | Annamalai | Selvaperunthakai | Kachchatheevu கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது இந்திராவின் ராஜதந்திர முடிவு. சிறிய பகுதியை கொடுத்து கனிம வளம் உள்ள பல பகுதியை எடுத்து விட்டார் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். இந்த கருத்துக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். 30 ஆண்டுகளில் இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் அந்த ராஜதந்திரமா? பலநூறு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார்களே அதுவும் உங்கள் ராஜதந்திரம் தானா? மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் நம் தமிழக மீனவ சொந்தங்கள் இதுவும் ராஜதந்திரத்தில் தான் அடங்குமா? கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது தமிழகத்தில் ஆட்சியிலிருந்தது திமுக. அப்போது முழு சம்மதம் தெரிவித்து தமிழக மீனவர்களுக்கு துரோகம் செய்து, 50 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடி கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தை பற்றி திமுக, காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே ஏன்? தமிழக காங்கிரஸ் தலைவர் சொல்வது போல கச்சத்தீவைத் தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று ஒப்புக்கொள்வாரா முதல்வர் ஸ்டாலின் என அண்ணாமலை சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.