தங்கை கணவரை ரோட்டில் வைத்து சாய்த்த அண்ணன் auto driver attacked by sword
தங்கை கணவரை ரோட்டில் வைத்து சாய்த்த அண்ணன் auto driver attacked by sword attackers escaped Hosur police crime auto driver dies illegal relationship reason ஒசூர் மாநகராட்சி தேர்ப்பேட்டை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறு என்கிற சிவக்குமார் (32). ஆட்டோ டிரைவர். நேற்றிரவு 10 மணிக்கு சிவக்குமார் வீட்டின் முன் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் சிவக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்தனர். பயந்துபோன சிவக்குமார் தப்பி ஒட முயன்றார். ஆசாமிகள் அவரை விரட்டி சென்று சரமாரி வெட்டினர். தலை, முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அலறியபடி சிவக்குமார் ரோட்டிலேயே சரிந்தார். அப்போது, அவ்வழியாக ஒரு பைக்கில் வந்த நபரை மர்ம ஆசாமிகள், அரிவாளை காட்டி மிரட்டினர். பைக்கை பிடுங்கி அதில் இரு ஆசாமிகளும் தப்பிச் சென்றனர். சிவகுமாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி நந்தினி மற்றும் உறவினர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ஓசூர் நகர போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிவக்குமாரை ஓசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். கொலை நடந்த இடத்துக்கு சென்று போலீசார் பலரிடமும் விசாரித்தனர். அப்போதுதான், நந்தினியின் அண்ணன் நவீனுக்கும், சிவகுமாருக்கும் முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. கொலை நடந்த பிறகு, நவீனும் தலைமறைவாகியிருந்தார். செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சந்தேகம் உறுதியானது. போலீசார் சிவகுமார் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், தோண்டி துருவி விசாரித்தபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. சிவக்குமார், நந்தினியை காதலித்து திருமணம் செய்தார். நந்தினியின் அண்ணன் நவீனும் அதே பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். மச்சான் வீட்டுக்கு அடிக்கடி மனைவியுடன் சென்று வந்துள்ளார், சிவகுமார். அப்போது, நவீன் மனைவிக்கும் சிவகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளத் தொடர்பாக மாறியுள்ளது. நவீன் இல்லாத சமயத்தில் அவர் வீட்டுக்கு சிவகுமார் சென்றுள்ளார். இதை தெரிந்து கொண்ட நவீன், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சிவகுமாருடன் பழகுவதை நவீன் மனைவி நிறுத்தியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக, சிவகுமாருக்கும், நவீனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அடிதடியிலும் ஈடுபட்டுள்ளனர். என் மனைவி உனக்கு தங்கை முறை வரும்; இத்துடன் நிறுத்திக் கொள்.. இல்லாவிட்டால் போட்டுத் தள்ளி விடுவேன் என சிவகுமாரை நவீன் எச்சரித்துள்ளார். அதை சிவகுமார் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து நவீன் மனைவியுடன் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். மெசேஜும் அனுப்பியதாக கூறப்படுகிறது. நவீன் ஆத்திரத்தின் உச்சிக்கே போனார். தங்கை விதவை ஆனாலும் பரவாயில்லை; சிவகுமாரை தீர்த்துக் கட்டி விட்டுத்தான் மறுவேலை என்ற முடிவுக்கு வந்துள்ளார். நண்பருடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். வீடு புகுந்து வெட்டினால் தங்கை நந்தினி தடுப்பாள். அவளுக்கும் காயம்படும் என நினைத்த நவீன், ரோட்டில் செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது சிவகுமாரை வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, நவீனையும், நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர். நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.