உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சகோதரத்துவம் தொடர வேண்டும் annamalai| bjp| mp navas

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சகோதரத்துவம் தொடர வேண்டும் annamalai| bjp| mp navas

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சகோதரத்துவம் தொடர வேண்டும் annamalai| bjp| mp navas| tiruparankundram பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: ஆன்மிக பூமியான தமிழகத்தில் அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தளங்களுக்கும் அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். ஆனால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவை. குறிப்பாக, எம்பி ஆக இருக்கும் நவாஸ்கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையை தூண்டும் வகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை மீது கும்பலாக சென்று அசைவ உணவு சாப்பிட்டு இருப்பது முற்றிலும் தவறான செயல். மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடு. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உலகில் பல மதங்கள் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தனை ஆண்களாக, தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர். அதனை கெடுக்கும்படி எம்பி நவாஸ்கனி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது போன்ற சமூக அமைதியை கெடுக்கும் வீண் நடவடிக்கைகளை கைவிட்டு, இத்தனை ஆண்டு காலமாக தொடரும், சகோதரத்துவமான நடைமுறைகளையே தொடர வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, எம்பி நவாஸ்கனி, திருப்பரங்குன்றத்திற்கு சென்று பார்வையிட்டார். சமைத்த அசைவ உணவை எடுத்து செல்ல தடை இல்லை என போலீஸ் கமிஷனர் கூறியதால் அசைவ உணவை மலைக்கு எடுத்து சென்று சாப்பிட்டதாக எம்பி கூறியிருந்தார்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை