ஹெஸ்புலா தளபதியை சுட்டுத்தள்ளிய கும்பல் | Hezbollah commander | Sheikh Muhammad Ali
ஹெஸ்புலா தளபதியை சுட்டுத்தள்ளிய கும்பல் | Hezbollah commander | Sheikh Muhammad Ali ஹெஸ்புலா அமைப்பின் மூத்த தளபதியான ஷேக் முகமது அலி ஹமாதி (Sheikh Muhammad Ali Hammadi) கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்தார். வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அவர் மீது 2 வாகனங்களில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். 6 குண்டுகள் உடலில் பாய்ந்ததில், சரிந்து விழுந்த ஷேக் முகமது ஸ்பாட்டிலேயே பலியானார். இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அமெரிக்காவின் FBI புலனாய்வு அமைப்பின் தேடப்படும் பட்டியலில் இருந்தவர் ஷேக் முகமது அலி ஹமாதி. ஹெஸ்புலாவின் மேற்கு அல்-பகா பிராந்தியத்தின் தளபதி. 1985ல் 153 பயணிகளுடன் சென்ற மேற்கு ஜெர்மன் விமானத்தை கடத்தினார். அதில் பயணித்த அமெரிக்கர் ஒருவரை சித்ரவதை செய்து, ஷேக் முகமது கொலை செய்தார். அதன்பிறகு FBI அமைப்பால் தேடப்படும் குற்றவாளி ஆனார். 4 ஆண்டுகளாக நடந்த குடும்ப சண்டையில் ஷேக் முகமது கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹசன் நஸ்ரல்லா உள்பட ஹெஸ்புலா அமைப்பின் 7 உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.