உயிர்தப்பிக்க இறங்கியபோது பயணிகளுக்கு நேர்ந்த சோகம் Pushpak Express accident|
உயிர்தப்பிக்க இறங்கியபோது பயணிகளுக்கு நேர்ந்த சோகம் Pushpak Express accident| passengers hit by train| karnataka express மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து உத்தரபிரதேசம் லக்னோவுக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் மஹேஜி மற்றும் பர்தாட் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ஜெனரல் கோச்சில் தீடீரென புகை கிளம்பியது. பெட்டியில் தீப்பிடித்து விட்டதாக நினைத்த பயணிகள் பதட்டத்தில் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். அந்த பெட்டியில் இருந்த பயணிகள் பதறியடித்து இறங்கி பக்கத்து தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில், டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் வேகமாக வந்தது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் சுதாரித்து ஓடுவதற்குள் அவர்கள் மீது ரயில் மோதிசென்றது. தூக்கி வீசப்பட்டதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த 6 பேர் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியின் பிரேக் ஜாம் ஆனதால் தீப்பொறியுடன் புகை ஏற்பட்டுள்ளது. ஆனால், பெட்டியில் தீப்பிடித்து விட்டதாக நினைத்து பயணிகள் ரயிலை நிறுத்தி இறங்கியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிர்கள் பரிபோனது வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இதே போல் உத்தரபிரதேச முதல்வர் யோகியும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.