உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல்லை, குமரி, தூத்துக்குடி நிறுவனங்களுக்கு கலெக்டர்கள் நோட்டீஸ் | Sand stolen

நெல்லை, குமரி, தூத்துக்குடி நிறுவனங்களுக்கு கலெக்டர்கள் நோட்டீஸ் | Sand stolen

நெல்லை, குமரி, தூத்துக்குடி நிறுவனங்களுக்கு கலெக்டர்கள் நோட்டீஸ் | Sand stolen | Order to pay penalty | 3 Districts | Collectors issues notice | தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி கடலோர பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்க தன்மை கொண்ட கனிமங்கள், அதிக விலை மதிப்புடைய தாது உப்புகளும் இருக்கின்றன. இதை அறிந்த சில நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தன. இதுபோன்ற இயற்கை வள சுரண்டலை தடுத்து நிறுத்த பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. 2012 முதல் 2013 வரை, அதிக அளவில் சட்ட விரோதமாக தாது மணல் கடத்தியதாக புகார் எழுந்தன. இதுகுறித்து சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து, தாது மணல் கடத்தல் தொடர்பாக விசாரித்தது. 2013 முதல் தாது மணல் எடுக்க தடை விதித்தது. சட்ட விரோதமாக தாது மணல் எடுத்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்தது. கோர்ட்டுக்கு உதவ வழக்கறிஞர் சுரேஷ் நியமிக்கப்பட்டார். இக்குழு பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி அறிக்கை அளித்தது. சுரேஷ் அளித்த அறிக்கையில், தாது மணல் எடுக்க தடை விதித்த பிறகும், அதற்கு முன்பும், அதாவது 2000 முதல் 2016 வரை, சட்ட விரோதமாக தாது மணல் எடுத்ததால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை கணக்கிட்டு, மணல் எடுத்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5,832 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ககன்தீப் சிங் பேடி குழு அளித்த அறிக்கையில், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 1.01 கோடி டன் தாது மணல் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க, கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட நிர்வாக தரப்பில், கடந்த ஆண்டு ஜனவரியில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், விசாரணை நடக்கிறது. ஓராண்டு ஆகியும் மாவட்ட நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு எந்த பதிலும் வரவில்லை. இதனால் 3 மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய 6 நிறுவனங்களிடம் இருந்து 3,528.36 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்க, தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அபராத தொகையை 60 நாட்களுக்குள் செலுத்தவும் 3 மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த உத்தரவு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ