அரசு பள்ளியில் வடமாநில குழந்தைகள் சேர்க்கை அதிகரிப்பு! Government School | Tiruppur | North Indian S
அரசு பள்ளியில் வடமாநில குழந்தைகள் சேர்க்கை அதிகரிப்பு! Government School | Tiruppur | North Indian Students பின்னலாடை நகரமான திருப்பூரில் 5 லட்சத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இதில் பலர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்க்கின்றனர். தற்போது வட மாநில தொழிலாளர்கள் பலருக்கு தங்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டுமென எண்ணம் வந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் சேர்ப்பவர்களின் எண்ணிக்கையானது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநில குழந்தைகளின் கல்விக்காக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக வடமாநில குழந்தைகளுக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இந்தி மொழியில் குழந்தைகளிடம் பேசி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தை போதிக்கின்றனர். ஆரம்பத்தில் தமிழ் கற்க சிரமப்பட்டாலும் போகப்போக தமிழ் வழிக் கல்வியை வட மாநில குழந்தைகள் சிறப்பாக கற்று தேர்ந்து வருவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது மட்டுமின்றி வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளும் அளிக்கப்படுகிறது. தமிழக குழந்தைகள் எல்லாம் ஆங்கில வழிக்கல்வியை தேடி ஓடும் நிலையில், வட மாநில குழந்தைகள் தமிழ் வழியில் கற்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.