/ தினமலர் டிவி
/ பொது
/ 6 மாத கர்ப்பிணி சினிமா பாணியில் கடத்தல்! குடும்பமே கைது | Crime | Salem Police | Love marriage
6 மாத கர்ப்பிணி சினிமா பாணியில் கடத்தல்! குடும்பமே கைது | Crime | Salem Police | Love marriage
சேலம், செட்டிமாங்குறிச்சியை சேர்ந்தவர் தனிஷ்கண்டன் வயது 25. ஓசூர் கம்பெனியில் வேலை செய்த போது போது, தருமபுரியை சேர்ந்த 22 வயது ரோஷினியுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 ஆண்டு காதலுக்கு பின் சென்ற ஜூலையில் திருமணம் செய்தனர். வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் எடப்பாடி போலீசில் தஞ்சமடைந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் ரோஷினி வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுவார்தைக்கும் வரவில்லை. தனிஷ்கண்டன் குடும்பத்துடன் இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர். ரோஷினி இப்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
ஜன 24, 2025