/ தினமலர் டிவி
/ பொது
/ இது தான் எனக்கு தர மரியாதையா? திமுக MLA கொந்தளிப்பு | Selvaperunthagai | DMK
இது தான் எனக்கு தர மரியாதையா? திமுக MLA கொந்தளிப்பு | Selvaperunthagai | DMK
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வந்துள்ளார். அவருடன் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், நாகப்பட்டினம் எம்எல்ஏ முகமது ஷா நவாஸ், போளூர் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி உடன் வந்தனர். காரைக்குடியில் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட வளர் தமிழ் நூலகத்தை பார்வையிட சென்றனர். கலெக்டர் ஆஷா அவர்களை வரவேற்று நூலகத்துக்குள் அழைத்து சென்றார். அப்போது காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசனை கண்டுகொள்ளாமல் அனைவரும் நூலகத்திற்குள் சென்றதாக தெரிகிறது. இதனால் பின்னால் வந்த எம்எல்ஏ எழிலரசன் கோபித்து கொண்டு மீண்டும் வெளியே சென்றார்.
ஜன 24, 2025