இந்தியா மிகப்பெரிய பயங்கரவாதியை தூக்கி வரும் கதை Mumbai attack | who is Tahawwur Rana | 26|11 attack
இந்தியா மிகப்பெரிய பயங்கரவாதியை தூக்கி வரும் கதை Mumbai attack | who is Tahawwur Rana | 26|11 attack மும்பை அட்டாக்கில் தொடர்புள்ள முக்கிய பயங்கரவாதியை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தி கொண்டு வர 6 ஆண்டுகளாக இந்தியா நடத்திய சட்டப்போராட்டம் இப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அப்படி என்ன நடந்தது? யார் அந்த பயங்கரவாதி என்பதை பார்க்கலாம். உலகை உலுக்கிய கொடூர பயங்கரவாத தாக்குதலில் ஒன்று மும்பை அட்டாக். 2008 நவம்பரில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேரை நம் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுப்பொசுக்கினர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். விசாரணைக்கு பிறகு அவன் தூக்கிலிடப்பட்டான். பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை நடத்தியது. இவர்களுக்கு பின்னால் இருந்து உதவியது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ. ஸ்பாட்டுக்கு வந்தது 10 பேர் தான் என்றாலும், இவர்களுக்கு பின்னால் இருந்து திட்டத்தை வகுத்து கொடுத்த முக்கிய பயங்கரவாதிகள், திட்டத்துக்கு துணை போனவர்கள் என பலருக்கும் தாக்குதலில் தொடர்பு உண்டு. அவர்களில் முக்கியமான 2 பயங்கரவாதிகள் தஹாவூர் உசேன் ராணா மற்றும் தாவூத் கிலானி என்று அழைக்கப்படும் டேவிட் கோல்மன் ஹெட்லி. இருவரும் இப்போது அமெரிக்கா வசம் உள்ளனர். இதில் தஹாவூர் ராணாவை நாடு கடத்தல் முறையை பயன்படுத்தி இந்தியா கொண்டு வர மத்திய அரசு 2019ல் முயற்சி எடுத்தது. இந்தியா-அமெரிக்கா இடையே கைதிகளை பரஸ்பரமாக பரிமாறும் ஒப்பந்தம் 1998 முதல் நடைமுறையில் உள்ளது. இதை பயன்படுத்தி தான் தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியது. இதற்கு அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது. ஆனால் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து தஹாவூர் ராணா, கோர்ட்டில் வழக்கு தொடுத்தான்.