உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை போலீசை திணறடித்த வழக்கில் மிகப்பெரிய அதிர்ச்சி Madurai case | therikadu video therikadu case

மதுரை போலீசை திணறடித்த வழக்கில் மிகப்பெரிய அதிர்ச்சி Madurai case | therikadu video therikadu case

மதுரை போலீசை திணறடித்த வழக்கில் மிகப்பெரிய அதிர்ச்சி Madurai case | therikadu video therikadu case மதுரை கே.புதூரை சேர்ந்த துளசிராம் மகன் சித்துராஜ் வயது 34. இவரது மனைவி பானு பிரியா. சித்துராஜ் திடீரென போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் 2019ம் ஆண்டு மதுரையில் ரவீந்திரன் என்பவர் நடத்திய போதை மறுவாழ்வு மையத்தில் சித்துராஜை சேர்த்து இருக்கிறார் பானு பிரியா. அவ்வப்போது பானு பிரியாவும் குடும்பத்தினரும் போதை மறுவாழ்வு மையம் சென்று சித்துராஜை பார்த்து வந்தனர். 2020ம் ஆண்டில் ஒரு முறை சித்துராஜை பார்க்க சென்றபோது போதை மறுவாழ்வு மையத்தில் அவர் இல்லை. இது பற்றி மைய நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவர் தப்பித்து சென்று விட்டதாக கூறினர். இதை கேட்ட சித்துராஜ் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. பல இடங்களில் தேடியும் சித்துராஜ் கிடைக்கவில்லை. போலீசிலும் புகார் செய்தனர். ஆனாலும் சித்துராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே சித்துராஜ் அப்பா துளசிராமுக்கு சந்தேகம் வந்தது. மகனை மீட்டுத்தரக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். சித்துராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதிகள் கெடு விதித்தனர். இதையடுத்து போலீஸ் விசாரணை வேகம் எடுத்தது. சித்துராஜ் குடும்பத்தினர், போதை மறுவாழ்வு மைய ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சித்துராஜ் மனைவி மீது சந்தேகம் வந்தது. அவரை தீவிரமாக விசாரித்த போது உண்மையை கக்கி விட்டார். அதாவது, பானு பிரியாவும் போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் ரவீந்திரன் உள்ளிட்டோரும் சேர்ந்து சித்துராஜை கொன்று புதைத்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஜன 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !