மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுவதை ஒரே நாடு ஒரே தேர்தல் தடுக்கும் | President draupadi murm
மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுவதை ஒரே நாடு ஒரே தேர்தல் தடுக்கும் | President draupadi murmu| One nation one elecion | Ensure better governance | குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டு மக்களுக்கு ரேடியோவில் உரையாற்றினார். பல ஆண்டுகளாக காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து வரும் நாட்டை, மீட்டெடுக்கும் முயற்சிகள் சமீப காலமாக அதிகளவில் நடக்கின்றன. அதில் ஒன்றாகத்தான், நுாறாண்டுகளுக்கு மேலாக இருந்த 3 கிரிமினல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சீர்திருத்தங்களை செய்ய, தீவிரமான, உறுதியான தொலைநோக்கு பார்வை தேவை. இந்த வரிசையில் நாட்டின் தேர்தல் முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்யும், ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை முக்கியமானது. இது சிறந்த நிர்வாகத்தை மாற்றி அமைக்கும். நீடித்த சிறந்த நிர்வாகம், கொள்கை நடவடிக்கைகள் முடங்குவதை தடுப்பது, ஆதாரங்கள் வீணாவதை தடுப்பது, மாநிலங்களுக்கு நிதிச் சுமை ஏற்படுவதை தடுப்பதையும் உறுதி செய்யும். நாடு சுதந்திரம் அடைந்தபோது, நாட்டில் கடுமையான வறுமை, பட்டினி இருந்தது. ஆனால், நாம் நம் மீது வைத்திருந்த நம்பிக்கையால் வளர்ச்சியை உறுதி செய்தோம். விவசாயிகள், தொழிலாளர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளித்தனர். இப்போது உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக வளர்ந்துள்ளோம். இந்த வளர்ச்சியை எட்ட, நமக்கு அரசியலமைப்பு உதவியுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும், அனைவரின் வளர்ச்சியையும் கொள்கையாக கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. ஒரு நாட்டின் வரலாற்றில், 75 ஆண்டுகள் என்பது கண்ணசைக்கும் காலத்தை போன்றது என்று கூறுவர். ஆனால், இந்த 75 ஆண்டுகளே, உலக அரங்கில் நமது இடத்தை உறுதி செய்துள்ளதாகவும் ஜனாதிபதி முர்மு கூறினார்.