உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சோசியல் மீடியா பதிவால் வழக்கில் சிக்கிய ராகுல் | Rahul | Congress M.P | Case registered | Netaji's

சோசியல் மீடியா பதிவால் வழக்கில் சிக்கிய ராகுல் | Rahul | Congress M.P | Case registered | Netaji's

சோசியல் மீடியா பதிவால் வழக்கில் சிக்கிய ராகுல் | Rahul | Congress M.P | Case registered | Netajis death controversy | நாடு சுதந்திரம் பெற காரணமான சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் 1945 ஆகஸ்ட் 18ல் தைவானின் தாய்பேய் நகரில் நடந்த விமான விபத்தில் இறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை உறுதியான ஆதாரம் வெளியாகவில்லை. கடந்த 23ம் தேதி நேதாஜியின் பிறந்த நாளையொட்டி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங். எம்.பி.,யுமான ராகுல் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ஆகஸ்ட் 18, 1945ல் நேதாஜி இறந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேதாஜி இறந்தது குறித்து எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், ராகுல் எப்படி தேதியை உறுதி செய்தார் என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நேதாஜி மரணம் தொடர்பாக பொய்யான தகவலை பரப்புவதாக ராகுல் மீது தெற்கு கொல்கத்தாவின் பவானிபூர் போலீஸ் ஸ்டேஷனில் அகில பாரதிய ஹிந்து மகாசபா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ராகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராகுல் மற்றும் அவரது கட்சியினர் மக்களிடம் உள்ள நேதாஜியின் நினைவுகளை அழிக்க முயற்சிப்பதாக அகில பாரதிய ஹிந்து மகா சபா மாநில தலைவர் சந்திரசூட் கோஸ்வாமி குற்றம் சாட்டினார். இவர்களை மக்கள் கடுமையாக தண்டிக்க வேண்டும். நேதாஜி குறித்து பொய்யான தகவலை பரப்பினால் அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்றும் கூறினார்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ