உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவிகளை சீரழித்த 3 சிறுவர்கள் உட்பட 6 பேரை தூக்கியது போலீஸ் | Girl students abuse

மாணவிகளை சீரழித்த 3 சிறுவர்கள் உட்பட 6 பேரை தூக்கியது போலீஸ் | Girl students abuse

மாணவிகளை சீரழித்த 3 சிறுவர்கள் உட்பட 6 பேரை தூக்கியது போலீஸ் | Girl students abuse | 3 Minor 3 Major boys arrested | Chennai | சென்னை பெரம்பூரை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் கடந்த 25ம் தேதி இரவு திருவிக நகர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 8ம் வகுப்பு படிக்கும் தனது 12 வயது மகள், பள்ளி முடிந்து தோழி வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிய நிலையில், இதுவரை வீட்டுக்கு வரவில்லை என தெரிவித்து இருந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமி போனதாக சொல்லப்படும் தோழி வீட்டுக்கு சென்று விசாரித்தபோது அந்த சிறுமியும் வீட்டில் இல்லாதது தெரிந்தது. கடைசியாக தான் பெரம்பூரில் இருப்பதாக கூறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். அந்த செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடியபோது, பெரம்பூர் தீட்டி தோட்டம் முதல் தெருவில் உள்ள அரசு நூலகத்தின் மொட்டை மாடியில், சிறுமி தனது 2 தோழிகள், மூன்று ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருப்பதை கண்டுபிடித்தனர். அனைவரையும் மீட்டு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். 12 வயது சிறுமியின் தோழிகளான 14 வயது சிறுமி, 16 வயது சிறுமிகளுடன் கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த 21 வயது கலிமுல்லா என்கிற அலி, அகரம் செங்கல்வராயன் தெருவை சேர்ந்த 19 வயது அபிஷேக், பெரம்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன் என மூன்று பேரும் உல்லாசமாக இருந்தது தெரிந்தது. மூன்று சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த திருவிக நகர் போலீசார், வழக்கை செம்பியம் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றினர். அவர்கள், சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கலிமுல்லா என்கிற அலி. அபிஷேக் மற்றும் 17 வயது சிறுவன் என மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கும் மற்ற 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர். சிறுமிகளை மருத்துவ பரிசோதனை முடித்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கலிமுல்லா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 11 வழக்குகளும், அபிஷேக் மீது ஒரு வழக்கும் உள்ளது. முன்னதாக நடந்த விசாரணையில், மாணவ மாணவிகள் தனிமையில் இருந்தபோது பெரவள்ளூரை சேர்ந்த 22 வயது சையத் முகமது ஜாபர், 17 வயது சிறுவன், பெரம்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த செம்பியம் மகளிர் போலீசார், சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவிட்டு சையது முகமதை சிறையில் அடைத்தனர்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ