அதிமுக ஓட்டுகளை கவர திமுக புது வியூகம்! Erode Bye Election | DMK | ADMK | NTK
அதிமுக ஓட்டுகளை கவர திமுக புது வியூகம்! Erode Bye Election | DMK | ADMK | NTK ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, அ.தி.மு.க, பா.ஜ, தே.மு.தி.க, உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்நிலையில் இவர்களது ஓட்டுகளை பெற, தி.மு.க. மற்றும் நா.த.க.வினர், பல்வேறு வகைகளிலும் முயன்று வருகின்றனர். இதுகுறித்து தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: அமைச்சர் முத்துசாமி அ.தி.மு.க.வில் இருந்தபோது அக்கட்சியினர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என பலருடனும் நட்புடன் பழகி வந்தார். அவர்களுடன் இன்றும் நட்புடன் உள்ளார். அதேபோல, பா.ஜ.விலும் அவருக்கு நல்ல பழக்கம் உள்ளது. அதனால், அ.தி.மு.க, பா.ஜ ஓட்டுகளையும் குறிவைத்து பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல அ.தி.மு.க.வில் அமைச்சராகவும், புறநகர் மாவட்ட செயலராகவும் இருந்த தோப்பு வெங்கடாசலம், தற்போது தி.மு.க.வில் உள்ளார். அவருக்கும் ஈரோட்டில் செல்வாக்கு உள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க.வில் இன்றைக்கும் அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. ஓட்டுகளை வெங்கடாசலம் வாயிலாக பெறும் முயற்சியில் தி.மு.க. தலைமை அவரை களம் இறக்கி விட்டுள்ளது. இதையடுத்து தொகுதிக்குள் முகாமிட்டிருக்கும் வெங்கடாசலம், அ.தி.மு.க.வினரை வளைக்க அவர்களை தேடிச் செல்கிறார். கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இளங்கோவன், 66,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை அவர் பெற்ற வித்தியாசத்தை சந்திரகுமார் கடக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படிப்பட்ட முயற்சிகளை தி.மு.க தலைமை மேற்கொண்டிருக்கிறது, என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறினர். ----