உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / MSME தொழில்களுக்கான கடன் வரம்பு அதிகரிப்பு Union budget

MSME தொழில்களுக்கான கடன் வரம்பு அதிகரிப்பு Union budget

MSME தொழில்களுக்கான கடன் வரம்பு அதிகரிப்பு Union budget| budget highlights for industries sector| MSME 2025-26 மத்திய பட்ஜெட்டில் தொழில்துறையினரை கைதூக்கிவிடும் வகையில் நிறைய அறிவிப்புகள் இடம் பெற்று உள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் 10 கோடியில் இருந்து 20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்யம் போர்ட்டலில் பதிந்துள்ள குறு நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரம்புடன் கடன் அட்டை அறிமுகப்படுத்தப்படும். முதல் ஆண்டில் 10 லட்சம் நிறுவனங்களுக்கு இந்த கார்டு வழங்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் தற்போதுள்ள 10 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதியுடன் கூடுதலாக 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கும் 5 லட்சம் பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில் 5 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும். MSME தொழில்துறைக்கான கடன் உத்தரவாத தொகை 5 கோடியில் இருந்து 10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி கடன் வழங்கப்படும். பொம்மை உற்பத்தி துறையில் இந்தியாவை சர்வதேச மையம் ஆகும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். காலணி மற்றும் தோல் துறையில் 22 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் பிரத்யேக உற்பத்தி திறன் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும். காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு உச்ச வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஜவுளி துறையை ஊக்குவிக்கவும் பட்ஜெட்டில் வரி சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கும் வகையில் கடன் அட்டை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி