உயிரோடு எரிக்க சதி நடந்தது?: ஏடிஜிபி கல்பனா பரபரப்பு புகார்
சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில், ADGP கல்பனா நாயக்கின் அறை கடந்த ஆண்டு ஜூலை 29ல் தீயில் எரிந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் சொல்லப்பட்டது. இந்த சம்பவம் தம்மை கொல்வதற்கு நடந்த சதி என்று ஏடிஜிபி கல்பனா கூறியிருக்கிறார். இது தொடர்பாக, டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமை செயலருக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார். சீருடை பணியாளர் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்திய சில நாட்களுக்கு பிறகு தீ சம்பவம் நடந்து இருக்கிறது. எரிந்த என் நாற்காலியை பார்த்தபோது, சற்று முன்னதாக அலுவலகத்திற்கு வந்திருந்தால் என் உயிரை இழந்திருப்பேன் என்பது தெளிவாக தெரிந்தது. தீ சம்பவம் பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஏடிஜிபி கல்பனா கூறியிருக்கிறார்.