SIஐ கத்தியால் குத்திய ஆசாமியை சுட்டுப்பிடித்த போலீஸ் SIPCOT police station Ranipet
SIஐ கத்தியால் குத்திய ஆசாமியை சுட்டுப்பிடித்த போலீஸ் SIPCOT police station Ranipet district petrol bombs hurled two men escaped cctv shows 7 special teams Police arrested one person crime ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலையத்தின் மீது நேற்று நள்ளிரவில் மாஸ்க் அணிந்த 2 ஆசாமிகள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். 2 குண்டும் போலீஸ் நிலையத்தின் கேட் மீது விழுந்து வெடித்தது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது, போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார், 2 ஆசாமிகளை பைக் மற்றும் ஜீப்பில் விரட்டினர். சந்துக்குள் பைக்கை ஓட்டி ஆசாமிகள் தப்பினர். போலீஸ் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா? என எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். குண்டு வீசிய மர்ம ஆசாமிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 7 தனிப்படையினரும் ராணிப்பேட்டையின் வெவ்வேறு பகுதிகளில் தீவிரமாக விசாரணை நடத்தினர். பழைய குற்றவாளிகளையும் விட்டு வைக்கவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மொத்தம் 10 பேரை தூக்கினர். அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில் முக்கிய குற்றவாளி ஹரி என்பது தெரிய வந்தது. செல்போன் சிக்னலை வைத்து அவன் பதுங்கியிருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். மாலை 4 மணியளவில் அதே சிப்காட் பகுதியில் ஹரி பதுங்கியிருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசை பார்த்ததும் ஹரி அதிர்ச்சியடைந்தான். தப்பிக்க நினைத்து கத்தியை எடுத்து போலீசை குத்திவிட்டு ஓட முயன்றான். அவனை பிடிக்க முயற்சித்த சப் இன்ஸ்பெக்டர் முக்தீஸ்வரனின் கையில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் தற்காப்புக்காக ஹரி காலில் போலீசார் சுட்டனர். ஓட முடியாமல் கீழே விழுந்த ஹரியை மடக்கிப்பிடித்தனர். உடனடியாக அவன் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் கூறினர். ஹரி கத்தியால் குத்தியதில் காயடைந்த சப் இன்ஸ்பெக்டர் முக்தீஸ்வரனும் சிகிச்சை பெற்றார். போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய ஆசாமியை ஒரு நாளுக்குள் போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.