உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழமையான கார்களை கண்டு வியந்து செல்பி எடுத்த மக்கள் | Heritage car Exhibition

பழமையான கார்களை கண்டு வியந்து செல்பி எடுத்த மக்கள் | Heritage car Exhibition

பழமையான கார்களை கண்டு வியந்து செல்பி எடுத்த மக்கள் | Heritage car Exhibition | Governor Kailashnathan | CM Rangasamy | Puducherry புதுச்சேரி பீச் ரோட்டில் சுற்றுலாத்துறை சார்பில் பாரம்பரிய பழைமையான கார்கள், டூவீலர்கள் கண்காட்சி நடந்தது. 50க்கும் மேற்பட்ட பழமை மிக்க கார்கள், 15க்கும் மேற்பட்ட பழமையான டூவீலர்களும் இடம் பெற்ற கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து பார்வையிட்டனர். கார்களின் பழமை பாரம்பரியம், அவை பயன்படுத்தப்பட்ட ஆண்டு உள்ளிட்ட தகவல்கள் கார் அருகே வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் தென்னிந்திய அளவில் முதல் சவ்ரலட் வகை கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த ராஜேஷ் அம்பால் என்பவர் அதை காட்சிப்படுத்தி இருந்தார். 1939ல் வாங்கப்பட்ட அந்த கார் மதுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் ஆகியோர் பயணம் மேற்கொண்டதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காரின் பின்பக்க சீட்டில் கவர்னர் கைலாஷ்நாதன் அமர்ந்து ரசித்தார். ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பழங்கால கார்களைப் பார்வையிட்டனர். பாரம்பரிய காரை பராமரிக்க கூடுதல் செலவு ஆனாலும் இதை வைத்திருப்பதை ஒரு பெருமையாகவும் கவுரவமாகவும் கருதுவதாக பழங்கால கார் ஓட்டுநர்கள் கூறினர்.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !