உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிகாரப்பூர்வமாக பாதை திறக்கப்படவில்லை! | Pahalgam | Kashmir Attack

அதிகாரப்பூர்வமாக பாதை திறக்கப்படவில்லை! | Pahalgam | Kashmir Attack

அதிகாரப்பூர்வமாக பாதை திறக்கப்படவில்லை! | Pahalgam | Kashmir Attack நேற்று முன்தினம் மத்திய அரசு ஏற்பாடு செய்த அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய உளவுத் துறை இயக்குநர் டபன் தேகா, பஹல்காம் தாக்குதல் பற்றி 20 நிமிடம் விளக்கம் அளித்தார். தாக்குதல் நடந்த பைசரன் பகுதியில் ராணுவ வீரர்கள் யாரும் இல்லாதது குறித்து ராகுல், மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்: காஷ்மீரில் ஆண்டுதோறும் ஜூனில் துவங்கும் அமர்நாத் யாத்திரைக்கு முன், பைசரன் பகுதியில் பாதுகாப்பு போடப்படும். அப்போது தான் அந்த பாதை அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். அமர்நாத் குகை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், வழியில் பைசரனில் ஓய்வெடுப்பதற்கு வசதியாக அவர்களின் பாதுகாப்புக்காக படையினர் நிறுத்தப்படுவர். ஆனால் அமர்நாத் புனித யாத்திரை பாதுகாப்பு பணிகளுக்காக படையினரை அணி திரட்டும் முன், உள்ளூர் சுற்றுலா நிறுவனத்தினர், ஏப்ரல் 20 முதல் டூரிஸ்ட்களை பைசரனுக்கு அழைத்து செல்லத் துவங்கியுள்ளனர். டூரிஸ்ட்கள் வருவதை உள்ளூர் நிர்வாகமும் தெரிவிக்கவில்லை. இதனால் பைசரனுக்கு ராணுவத்தினர் அனுப்பப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல நம்மிடம் போதுமான அளவுக்கு சேமிப்பு வசதி இல்லாமல் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன் எனவும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அரசு அதிகாரிகள், இது பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் சமிக்ஞை. மிகக் கடுமையான நடவடிக்கையை இந்தியா எடுக்கும் என்றும், எதிர்காலத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற வலுவான செய்தியை பாகிஸ்தானுக்கு தெரிவிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றனர்.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி