திருவிழா ஊர்வலத்தில் சோகம்! நிதியுதவி அறிவிப்பு | Salem | Kanchanayakkanpatti Temple Function | TNGo
திருவிழா ஊர்வலத்தில் சோகம்! நிதியுதவி அறிவிப்பு | Salem | Kanchanayakkanpatti Temple Function | TNGovt சேலம் கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சீர் கொண்டுவரும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. அப்போது பைக்கில் மூட்டைகளில் வைத்திருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இந்தக் கோர விபத்தில் 11 வயது சிறுவர்களான கார்த்திக், தமிழ்ச்செல்வன் மற்றும் 29 வயது செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த லோகேஷ் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். லோகேஷுக்கு வயது 20. 2 பைக்குகள் எரிந்து தீக்கிரையானதுடன் அருகில் இருந்த கார் மற்றும் 2 வீடுகள் சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில் நாட்டு வெடியை பைப்பில் வைத்து வெடித்தது தெரியவந்துள்ளது கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட இந்த சோக சம்பவம் தொடர்பாக கடையம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.