உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக கூட்ட அரங்கில் கதறிய வக்கீல் மனைவி | Pudukkottai | Udhayanidhi

திமுக கூட்ட அரங்கில் கதறிய வக்கீல் மனைவி | Pudukkottai | Udhayanidhi

திமுக கூட்ட அரங்கில் கதறிய வக்கீல் மனைவி | Pudukkottai | Udhayanidhi புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்தார். கட்சி சார்ந்த விழா என்பதால் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அப்போது அரசமலையை சேர்ந்த அரசு வக்கீல் முருகேசன் தனது மனைவியுடன் உதயநிதி காண வந்திருந்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த உதயநிதிக்கு புத்தகம் பரிசளித்துள்ளார். அருகில் நின்று செல்பி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது நெரிசலை பயன்படுத்தி வக்கீல் முருகேசன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி திருடி சென்றுள்ளனர். இதை கேள்விப்பட்ட அவரது மனைவி மண்டபம் நுழைவாயில் அமர்ந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வக்கீல் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடித்து பணத்தை மீட்டு தருவோம் என உறுதி அளித்தனர்.

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ