உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காலை சுற்றும் பாம்பு காரணமாக சென்றார் ஸ்டாலின்; விஜய் விமர்சனம் | TVK | VIjai | CM Stalin Visit

காலை சுற்றும் பாம்பு காரணமாக சென்றார் ஸ்டாலின்; விஜய் விமர்சனம் | TVK | VIjai | CM Stalin Visit

காலை சுற்றும் பாம்பு காரணமாக சென்றார் ஸ்டாலின்; விஜய் விமர்சனம் | TVK | Vijay | CM Stalin Visit தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை; டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் டாஸ்மாக் இயக்குனர் மற்றும் திமுக தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருங்கியவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து தமிழக அரசு இடைக்கால தடையும் வாங்கியது. ஆனால் இது நிரந்தர தடை இல்லை என்பதால் விசாரணை நிறுத்தப்படும் இடத்தில் பேசும் நிலைக்கு வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதக்கேற்றாற் போல அமைந்தது தான் நிதி ஆயோக் கூட்டம். இது வரை செல்லாத ஸ்டாலின் இப்போது மட்டும் ஏன் செல்ல வேண்டும். எல்லாம் அமலாக்கத்துறை படுத்தும் பாடு தான். என்றைக்கு இருந்தாலும் அமலாக்கத்துறை நடவடிக்கை காலை சுற்றும் பாம்பு என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளார். 1000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஸ்டாலின் டில்லி சென்று பிரதமரையும் தனியாக சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பில் உண்மையாகவே இது தொடர்பாக பேசவில்லை என அவரால் மனசாட்சியுடன் கூற முடியுமா? ஸ்டாலின் தஞ்சம் அடைய தான் வருகிறார் என்பது தெரிந்தும் எப்படி இவர்களால் கொஞ்சி குலாவி வரவேற்க முடிகிறது. இது தான் இவர்களின் மறைமுக கூட்டணி. திமுக - பாஜ மறைமுக கூட்டணியை உறுதி படுத்தும் வகையில் ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் கொடுத்து போட்டோ எடுத்ததும் உறுதி படுத்துகிறது என விஜய் கூறி உள்ளார்.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை