உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பத்து பேர் மரணம்; பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! Monsoon-rains | arunachal | assam

பத்து பேர் மரணம்; பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! Monsoon-rains | arunachal | assam

பத்து பேர் மரணம்; பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! Monsoon-rains | arunachal | assam | northeast | mizorom தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அசாமில் பெய்யும் கனமழையால் தலைநகர் கவுகாத்தி உள்பட பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. காம்ரூப், காம்ரூப் மெட்ரோ, சச்சார் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச் சரிவு சம்பவங்களில் 5 பேர் இறந்தனர். நிலச்சரிவு, மரம் விழுதல் போன்ற சம்பவங்கள் தொடர வாய்ப்புள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேகாலாயாவில் 2 பேரும், மிசோரம், நாகலாந்து, திரிபுராவில் தலா ஒருவரும் கன மழை பாதிப்புகளால் இறந்துள்ளனர். அருணாச்சல பிரதேசத்திலும் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச் சரிவு சம்பவங்கள் நடந்துள்ளன. 117 வீடுகள் உள்பட உள்கட்டமைப்புகள் பல வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. இறப்புகள் எதுவும் இல்லை என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்கிறது. அங்கு தீஸ்தா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. மிசோரமில் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் நிலச் சரிவுகள் ஏற்பட்டதோடு, பாறைகளும் சரிந்தன. தெற்கு மிசோரமின் லாங்ட்லாய் நகரில் நேற்று இரவு நடந்த நிலச்சரிவில் 5 வீடுகள், ஒரு ஓட்டல் இடிந்து சேதமானது. இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. ஓட்டலில் தங்கி இருந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மிசோரம் மாநில பேரிடர் மேலாண்மை துறையைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நிலச்சரிவு, பாறை விழுந்தது, வெள்ளத்தில் மூழ்கியது ஆகிய காரணங்களால் மொத்தம் 10 பேர் இறந்துள்ளனர். வட கிழக்கு மாநிலங்களைப் போலவே கேரளா, கர்நாடகா கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. மழை தொடர்பான சம்பவங்களில் கேரளாவில் இதுவரை 4 பேர் இறந்துள்ளதாக கேரளா அரசு கூறி உள்ளது.

மே 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை