லாட்வியாவில் இந்திய ஒருமைப்பாட்டை புகழ்ந்த கனிமொழி! Operation Sindhoor | DMK | Kanimozhi
லாட்வியாவில் இந்திய ஒருமைப்பாட்டை புகழ்ந்த கனிமொழி! Operation Sindhoor | DMK | Kanimozhi | India Pak war | Latvia பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான லாட்வியாவுக்கு சென்ற நம் எம்பிக்கள் குழு, அந்நாட்டு அரசு பிரதிநிதிகள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில், ஆபரேஷன் சிந்துார் பற்றி விளக்கியது. குழுவுக்கு தலைமையேற்று சென்ற திமுக எம்பி கனிமொழி, இந்தியாவின் ஒற்றுமை குறித்து பேசினார். செய்தியாளர் கூட்டத்தில் காஷ்மீர் மக்களின் மனநிலை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாடு பற்றி விளக்கினார். இந்திய எம்பிக்கள் குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளித்ததில் மகிழ்ச்சி. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ள லாட்வியா, இரு நாடுகளிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக கூறியதில் மகிழ்ச்சி. நாங்கள் இங்கு வந்து இறங்கியதும், இங்கு வசிக்கும் இந்தியர்கள் எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் மதத்தை கேட்டு கொலை செய்தனர். இதன் மூலம் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் எங்களை பிரிக்க முயற்சி நடந்தது. எங்கள் நாட்டை பிளவுபடுத்த பயங்கரவாதிகள் முயன்றனர். ஆனால் காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் களத்தில் இறங்கினர். வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இனி எங்களை எந்த விதத்திலும் பிளவுபடுத்த முடியாது. இந்தியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணம் பலிக்காது என, கனிமொழி பேசினார்.