அண்ணா பல்கலை பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்ற ஸ்டாலின் mk stalin| tn cm| anna universiry crime verdic
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்ற ஸ்டாலின் mk stalin| tn cm| anna universiry crime verdict அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு மகளிர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது. இந்த தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின் வரவேற்று உள்ளார். அவரது அறிக்கை: பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழக காவல்துறை விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டும் வகையில் வகையில், சென்னை மாணவி வழக்கை நியாயமாகவும், விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்கு கடும் தண்டனையை பெற்றுத் தந்திருக்கிறோம். தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் எந்த சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.