2 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை ஏன் இல்லை! | Green Tribunal | Illegal constructions | ECR
2 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை ஏன் இல்லை! | Green Tribunal | Illegal constructions | ECR முதலியார்குப்பம் முகத்துவாரம் அருகில் சி.ஆர்.இசட். அனுமதி பெறாமல் சுற்றுலா வளர்ச்சி கழகம், கழிப்பறைகள், குடில்கள், கான்கிரீட் துாண்கள் மற்றும் சுற்றுச்சுவர்களை கட்டுகிறது. இந்த சட்ட விரோதமான கட்டுமானங்களை தடுக்க உத்தரவிட வேண்டும் என காஞ்சிபுரத்தை சேர்ந்த கண்ணப்பன் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்தார். இந்த வழக்கை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் விசாரித்தனர். கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய அறிவிப்பை மீறிய கட்டுமானங்கள் மீது 2 ஆண்டுகள் கடந்தும் மாநில ஆணையமும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது. விதி மீறல்கள், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும், தீர்ப்பாயம் உத்தரவிட்டும் அப்படி இருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்டு 1ல் நடக்கும். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர், செங்கல்பட்டு கலெக்டர் பொறுப்பேற்க வேண்டும். அடுத்த விசாரணையின்போது, இவர்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக வேண்டியிருக்கும் என அறிவுறுத்தினர்.