ஸ்டாலின் சூளுரைத்த ஊருக்கு கூட்டத்தை மாற்றிய அமித்ஷா | Stalin vs Amit Shah | dmk vs bjp | Amit Shah
ஸ்டாலின் சூளுரைத்த ஊருக்கு கூட்டத்தை மாற்றிய அமித்ஷா | Stalin vs Amit Shah | dmk vs bjp | Amit Shah madurai visit மதுரையில் கடந்த 1-ம் தேதி திமுக பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை மத்திய பாஜ அரசுக்கு எதிரானவை. குறிப்பாக, மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜ அரசுக்குக் கண்டனம், சுப்ரீம் கோர்ட்டுடன் மோதும் பாஜ அரசுக்குக் கண்டனம், வஞ்சக பாஜவையும், துரோக அதிமுகவையும் விரட்டியடித்து 2026-ல் திமுக ஆட்சி தொடர களப்பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தப் பொதுக்குழுவில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பேசும்போது, அதிமுக, பாஜகவை நேரடியாகவும், நடிகர் விஜய்யை மறைமுகமாகவும் விமர்சனம் செய்தார். எந்த ஷா வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழகம் எப்போதுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான் என்றெல்லாம் ஆவேசமாகப் பேசினார். இது பாஜவினருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. எனவே திமுக பொதுக்குழு கூட்டம் நடத்திய மதுரையிலேயே பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, அமித்ஷாவை கொண்டே பதிலடி கொடுக்க பாஜ முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அமித் ஷா வரும், 8ம் தேதி மதுரை வருகிறார். அவர், தென் மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து, தேர்தல் பணிகள் தொடர்பாக அறிவுரை வழங்க உள்ளார். இதற்காக அன்றைய தினம் மாலை 4:00 மணிக்கு, பிரமாண்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துகிறார் அமித் ஷா. இதில் மாநில அளவில் கிளை அமைப்புகளுக்கு மேலான, மாநில அமைப்புகள் வரையான நிர்வாகிகள் 12,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இவர்களோடு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். முதலில், இப்படியொரு கூட்டத்தை, கோவையில் கூட்டி அமித் ஷாவை தமிழகம் அழைத்து வரத்தான் ஏற்பாடாகி இருந்தது. திமுக பொதுக்குழு மதுரையில் நடந்து முடிந்தபின், அமித் ஷாவே, நிகழ்ச்சியை மதுரையில் நடத்துமாறு கூறிவிட்டதாக பா.ஜ., வட்டாரங்கள் கூறின.