உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கன்னட மொழி விவகாரத்தில் ஸ்டாலின் மவுனம் இதற்கு தான் kamal haasan kannada row | Stalin | dmk vs bjp

கன்னட மொழி விவகாரத்தில் ஸ்டாலின் மவுனம் இதற்கு தான் kamal haasan kannada row | Stalin | dmk vs bjp

கன்னட மொழி விவகாரத்தில் ஸ்டாலின் மவுனம் இதற்கு தான் kamal haasan kannada row | Stalin | dmk vs bjp சென்னையில் நடந்த தக் லைப் திரைப்பட வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்றார். இது கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த கர்நாட்க முதல்வர் சித்தராமய்யா, கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியாது என்றார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், கன்னட அமைப்பினரும், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கின்றனர். கர்நாடக ஐகோர்ட்டும் இதே கருத்தை தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கமலுக்கு எதிராக கர்நாடக முதல்வர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார். இது குறித்து திமுக மூத்த நிர்வாகிகள் கூறியது: தமிழில் இருந்துதான் மற்ற திராவிட மொழிகள் தோன்றின என்பது திமுக எப்போதும் பேசி வருவதுதான். சினிமா வெளியீட்டு விழாவில் கமல் பேசியதால், படத்துக்கு தடை விதித்து பெரிய பிரச்னையாக்கி உள்ளனர். மத்திய பாஜ அரசை கடுமையாக எதிர்த்து வரும் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்கு கிடைத்த முதல் வெற்றியாக, லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நடத்திய கூட்டம் அமைந்தது. அதில் கேரளா, தெலங்கானா முதல்வர்கள், கர்நாடக துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில கவர்னர்களின் அதிகாரம் தொடர்பான தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பினார். இது தொடர்பாகவும் தென்மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் கமலின் பேச்சால், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இது தமிழகம், கர்நாடகம் இடையே இணக்கமின்மையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து மோதலும் ஏற்பட்டுள்ளது. இதனால் மோடி அரசுக்கு எதிராக, தென் மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இந்த விவகாரத்தில் எதுவும் கூறாமல் ஸ்டாலின் மவுனம் காத்து வருகிறார் என்று திமுக மூத்த நிர்வாகிகள் கூறினர்.

ஜூன் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ