சிந்தூர் செடி பெண் சக்தியின் வீரத்தின் அடையாளம்: மோடி PM Modi House |Sindoor plant |World Environm
சிந்தூர் செடி பெண் சக்தியின் வீரத்தின் அடையாளம்: மோடி PM Modi House |Sindoor plant |World Environment Day| உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பிரதமர் மோடி தமது வீட்டில் சிந்தூர் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த மரக்கன்று, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் நினைவாக பிரதமர் மோடிக்கு குஜராத் பெண்கள் கொடுத்தது. இது குறித்து பிரதமர் மோடி கூறும்போது, 1971ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரின்போது, குஜராத்தின் கட்ச் பகுதி பெண்கள் துணிச்சலுக்கும் வீரத்துக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தனர். சமீபத்தில் குஜராத் சென்றபோது அந்தப் பகுதி பெண்கள் எனக்கு சிந்தூர் மரக்கன்றை பரிசளித்தனர். அந்த செடியை பிரதமர் இல்லத்தில் சுற்றுச் சூழல் தினமான இன்று நடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்தச் செடி நமது நாட்டு பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் வலிமையான அடையாளமாக எப்போதும் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, டில்லி அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 200 மின்சார பஸ்களின் பயன்பாட்டை மோடி துவக்கிவைத்தார். அம்மா பெயரில் ஒரு மரம் நடுவோம் திட்டத்தில் அங்கும் ஒரு மரக்கன்றை பிரதமர் மோடி நட்டுவைத்தார்.