சீனாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா HKU-5 virus| corona virus
சீனாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா HKU-5 virus| corona virus 2019ல் சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இப்போதும் தொடர்கிறது. உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் காணப்படுகிறது. இச்சூழலில், கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த, அதை விட வீரியமான HKU-5 வைரஸ் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு முன்பாகவே மெர்ஸ் என்ற வைரஸ் உண்டானது. ஆனால், அது பெரிய அளவில் பரவவில்லை. எனினும், இந்த வைரஸ் பாதித்தவர்களில் 33 சதவீதம் பேர் மரணம் அடைந்தனர். மெர்ஸ் வைரசின் உருமாற்றமே கொரோனா. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதே போல், தற்போது HKU-5 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் சீனா, ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இப்போதைக்கு வவ்வால்களில் காணப்படுகிறது. வீரியம் மிக்க இது, மனிதர்களுக்கு பரவினால், உலகளவில் பெருந்தொற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கொரோனாவை போலவே HKU5 வைரசும் சுவாச மண்டலம் மூலம் மனித உடலுக்குள் நுழையும் அபாயம் உள்ளது. எனினும் மனிதர்களுக்கு பரவியதாக இதுவரை ஆதாரங்கள் ஏதும் இல்லை. செல்களை பாதிக்கும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. மனிதர்களுக்கு பரவும் திறன் HKU5 வைரஸ்க்கு இருப்பதால் அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.