உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திண்டுக்கல் டாக்டருக்கு கொடைக்கானலில் என்ன நடந்தது? | Doctor IV Fluid Kodaikanal |

திண்டுக்கல் டாக்டருக்கு கொடைக்கானலில் என்ன நடந்தது? | Doctor IV Fluid Kodaikanal |

திண்டுக்கல் டாக்டருக்கு கொடைக்கானலில் என்ன நடந்தது? | Doctor IV Fluid Kodaikanal | கொடைக்கானலில் இருந்து பூம்பாறை செல்லும் ரோட்டில் சந்தேகத்துக்கு இடமாக கார் நிற்பதாக போலீசுக்கு தகவல் போனது. கார் அருகில் சென்றால் துர்நாற்றம் வீசுவதாக அவ்வழியே சென்றவர்கள் கூறி உள்ளனர். ஸ்பாட்டுக்கு சென்ற போலீசார் காருக்குள் அழுகிய நிலையில் இருந்த ஆண் சலடத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்கான கொடைக்கானல் அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். காருக்குள் ஏதாவது தடையங்கள் இருக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது ஒரு கடிதமும், சில ஆவணங்களும் இருந்துள்ளன. இறந்தவர் திண்டுக்கல் வேடசந்துரை சேர்ந்த டாக்டர் ஜோஸ்வா சாம்ராஜ் என தெரிந்தது. இவர் பிலிப்பின்ஸ் நாட்டில் டாக்டர் படிப்பு முடித்துள்ளார். சேலத்தில் மயக்கவியல் துறையில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் வேடசந்தூரிலுள்ள தனது பெற்றோரை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் பிறகு காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேடச்சந்தூா் போலீசில் மே 2ம் தேதி பெற்றோா் புகாா் கொடுத்துள்ளனர். தற்போது ஜோஸ்வா சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவரது தந்தை ஜெயராஜிற்கு தகவல் சொல்லப்பட்டது. கடைசியாக வீட்டுக்கு வந்த போது கூட நன்றாக தான் பேசினார் என பெற்றோர் கதறி அழுதனர். முதல்கட்ட விசாரணையில் நரம்பு வழியே ஊசியில் மருந்து செலுத்தி ஜோஸ்வா இறந்தது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக ஆன்லைன் கேம் விளையாட பணம் செலுத்திய ஆதாரங்களும் கிடைத்துள்ளது. 8 லட்சம் ரூபாய் வரை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கடன் வாங்கி உள்ளார். ஆனால் பணம் நெருக்கடி இறப்புக்கு காரணமாக இருக்காது என அவரது பெற்றோர் சொல்கின்றனர். காரில் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் தனது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே டாக்டர் ஜோஸ்வாக்கு என்ன நடந்தது என தெரியவரும் என போலீசார் கூறினர்.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை