உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக மாநில நிர்வாகி உட்பட 7 பேருக்கு தண்டனை! |

திமுக மாநில நிர்வாகி உட்பட 7 பேருக்கு தண்டனை! |

திமுக மாநில நிர்வாகி உட்பட 7 பேருக்கு தண்டனை! | மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் திமுக,போராட்டத்தை கையில் எடுத்தது. பொது இடங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்தனர். பிப்ரவரி 23 அன்று பாளையங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் திமுக பொறியாளர் அணி துணை செயலாளர் ராஜவர்மன் தலைமையில் அக்கட்சியினர் இந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்து தமிழ் வாழ்க என்று எழுதினர். நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், விசாரணை நடத்தி ராஜவர்மன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் 7 பேர் மீது அத்துமீறி நுழைதல், பொது அறிவிப்புகளை சேதப்படுத்துதல், உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, திமுக நிர்வாகி ராஜவர்மன் உள்ளிட்ட 7 பேருக்கு ஒரு மாதம் சிறை அல்லது தலா 10,000 அபராதம் விதித்தார். திமுகவினர் 10,000 அபராதம் செலுத்தினர்.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி