உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அலிபிரி டோல்கேட்டில் திருப்பி அனுப்பப்பட்ட கார் | TTD | Tirupati | Alipiri Mettu

அலிபிரி டோல்கேட்டில் திருப்பி அனுப்பப்பட்ட கார் | TTD | Tirupati | Alipiri Mettu

அலிபிரி டோல்கேட்டில் திருப்பி அனுப்பப்பட்ட கார் | TTD | Tirupati | Alipiri Mettu காஷ்மீர் பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து திருப்பதி மலை அடிவாரத்தில் முழு அளவில் வாகன சோதனைகளை நடத்த வேண்டும். அதிநவீன பாதுகாப்பு உபரணங்களை கொண்டு வந்து சோதனை நடத்தப்பட வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் அலிபிரி டோல்கேட்டில் கடுமையான சோதனை நடத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து வந்த சொகுசு காரை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் ஏர் பிஸ்டல் துப்பாக்கி மற்றும் ஒரு டெலஸ்கோப் இருந்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். கார் ஓட்டி வந்த குமார் என்பவரிடம் விசாரணை நடத்தினர். திருமலை மலை பாதையில் துப்பாக்கி கொண்டுவரக்கூடாது என்கிற கட்டுப்பாடு எனக்கு தெரியாது. காருக்குள் தானே இருக்கிறது என எடுத்து வந்துவிட்டேன் என அவர் விளக்கம் அளித்துள்ளார். இருந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுத்த அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பினர். திருமலைக்கு செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் பாதுகாப்பு விதிகள் கடுமையாக இருக்கும் என தெரிவித்தனர்.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !