இளம்பெண்ணிடம் சில்மிஷம்: கரூர் பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம் young woman angry fight with man
இளம்பெண்ணிடம் சில்மிஷம்: கரூர் பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம் young woman angry fight with man tasmac shop karur bus stand police crime இங்கு மது குடித்து விட்டு மதுப்பிரியர்கள் செய்யும் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றிர கரூர் பஸ் நிலையத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தது.. டாஸ்மாக்கில் மூக்கு முட்ட மது குடித்த ஒரு ஆசாமி, சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை பார்த்தார். சாலையை கடந்து சென்ற இளம்பெண்ணின் பின்னாலேயே சென்று சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அப்பெண் பொங்கி எழுந்து அந்த ஆசாமியை பார்த்து கடுமையாக திட்டத் துவங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடிச்சா வீட்டுக்கு போக மாட்டியா ? நீ பாட்டுக்கு பின்னாடியே வர்ற... பைத்தியக்கார நாயே ? என இளம்பெண் கடுமையாக திட்டினார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் போதை ஆசாமியை பிடித்து தர்ம அடி போட்டு போலீசில் ஒப்படைத்தனர். போதை ஆசாமிக்கு ஏறக்குறைய 40 வயதிருக்கும். அவரை பிடித்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் செய்து விட்டார்கள் என இது போன்ற ஆசாமிகளை கடுமையாக தண்டிக்காமல் விட்டு விடக்கூடாது; அப்படி விட்டால், பின்னாளில் பெரியளவில் பாலியல் குற்றங்கள் நடந்து விடும். எனவே, . வருமுன் காப்பது போல, பாலியல் குற்றவாளிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என தர்ம அடி போட்ட சிலர் கூறினர்.