உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொள்ளாச்சி டீச்சர் வீட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம் | Pollachi | Police

பொள்ளாச்சி டீச்சர் வீட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம் | Pollachi | Police

பொள்ளாச்சி டீச்சர் வீட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம் | Pollachi | Police பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் வசித்து வருபவர் சிவதாஸ். ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர். LIC முகவராக உள்ளார். மனைவி யமுனா. அரசு பள்ளி ஆசிரியர். இவர்களது மகன் ரவிசங்கர், வயது 22. நேற்று யமுனா வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பினார். பின்னர் சிவதாசும், ரவிசங்கரும் வெளியே சென்றனர். பள்ளி முடிந்ததும் யமுனா மாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. பதறியடித்து ஓடிச் சென்று பார்த்தார். கணவர் சிவதாஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை கத்தியால் குத்திவிட்டு ஒருவன் தப்பி ஓடினான். அவனை பிடிக்க முயன்றும் முடியவில்லை. சிவதாஸ் அருகே மகன் ரவிசங்கரும் காயங்களுடன் கிடந்துள்ளார். கணவரும், மகனும் சரிந்து கிடப்பதை கண்டு யமுனா துடித்து போனார். கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். போலீசுக்கும், ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் தெரிவித்தனர். இருவரையும் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். பொள்ளாச்சி டிஎஸ்பி சிருஷ்டி சிங் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தப்பி ஓடிய குற்றவாளியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

ஜூன் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ