உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவின் பொய் குற்றச்சாட்டை தகர்க்க பாஜ வியூகம் | 2026 election | Minorities vote | BJP plan | DMK

திமுகவின் பொய் குற்றச்சாட்டை தகர்க்க பாஜ வியூகம் | 2026 election | Minorities vote | BJP plan | DMK

திமுகவின் பொய் குற்றச்சாட்டை தகர்க்க பாஜ வியூகம் | 2026 election | Minorities vote | BJP plan | DMK | 2026 சட்டசபை தேர்தலை முன்வைத்து முதல் ஆளாக அதிமுகவுடனான கூட்டணியை பாஜ உறுதி செய்தது. தொடர்ந்து பல கட்சிகளுடன் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜ மதவாத கட்சி, சிறுபான்மையினருக்க எதிரானது என்று திமுக தொடர்ந்து மக்கள் மத்தியில் குற்றச்சாட்டை பரப்பி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, வரும் தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற பாஜ திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ., வட்டாரத்தில் கூறியதாவது, தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம்களில் பலர் துபாய், சவுதி அரேபியா, குவைத் என ஐக்கிய அரபு நாடுகளில் வேலை செய்கின்றனர். அந்நாடுகள், பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய விருதுகளை வழங்கி கவுரவிக்கின்றன. கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த, ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, போப் பிரான்சிசை சந்தித்தார். அப்போது போப், மோடியை ஆரத்தழுவினார். உலகில் இஸ்லாம், கிறிஸ்துவத்துக்கு தலைமை வகிக்கும் நாடுகள் அனைத்தும் பிரதமர் மோடியை விரும்புகின்றன. ஆனால் தமிழகத்தில், மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர். பா.ஜ முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு எதிரான கட்சி என திமுக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறது. வக்ப் உள்ளிட்ட சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளையும் பரப்புகிறது. தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும், பா.ஜவுக்கு இந்துக்களை போல், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் ஓட்டளிக்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில், பா.ஜ மேலிடம் தீவிரமாக உள்ளது. இதனால் அக்கட்சி தொடர்ந்து ஏமாற்றி பெறும் முஸ்லிம், கிறிஸ்துவர்கள் ஓட்டுகளை பெற பா.ஜ வியூகம் வகுத்துள்ளது. அவர்களின் ஓட்டுகள் மொத்தமாக கிடைக்கவில்லை என்றாலும், 10 ஓட்டுக்கு இரண்டு ஓட்டையாவது கட்டாயம் பெற வேண்டும் என திட்டமிட்டுள்ளது. இதற்காக, இரு சமூகத்தினரும் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அவர்களின் நீண்ட கால கோரிக்கைகள், மத்திய அரசிடம் எதிர்பார்க்கும் நலத்திட்ட உதவிகள் என்ன என்பதை, மேலிட தலைவர்கள், தங்களுக்கு வேண்டிய நபர்களை ஆய்வுக்கு அனுப்பி, விபரங்களை சேகரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர்களை, தமிழகத்திற்கு அனுப்பி, முஸ்லிம், கிறிஸ்துவ பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தி, கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் மதவாத கட்சி என்ற பொய் குற்றச்சாட்டை முறியடித்து, திமுகவுக்கு முழுதுமாக ஓட்டு விழுவது தடுக்கப்படும். சிறுபான்மையினரின் ஓட்டுகள் பா.ஜவுக்கு கிடைக்காது என்ற பொய் தகர்க்கப்படும் என்றும் பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ