நாலரை பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓட்டம்! | Trichy | Chain snatching | Crime
நாலரை பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓட்டம்! | Trichy | Chain snatching | Crime திருச்சி திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையை சேர்ந்தவர் மதியழகன் இவரது மனைவி கலா வயது 35. மன்னார்புரம் மின் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர். நேற்று மாலை பணி முடிந்து கலா சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது 2 மர்ம நபர்கள் பைக்கில் பின்தொடர்ந்தனர். ஆளில்லாத பகுதியில் கலாவை கீழே தள்ளி நாலரை பவுன் செயினை பறித்து எஸ்கேப் ஆகினர். காயமடைந்த கலா கூச்சலிட்டும் அவர்களை பிடிக்க முடியவில்லை. போலீசில் புகார் கொடுத்தார். தஞ்சை திருச்சி ஹைவேசில் இருவரும் தப்பிச் சென்றது தெரிந்தது. இந்த சூழலில் இரவு காட்டூர் ஆயில் மில் செக்போஸ்டில் அரியமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். எதேச்சையாக இவர்களது பைக்கை மறித்த போது பைக் ஓட்டியவன் அரிவாளை எடுத்து மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடினான். பின்னால் இருந்தவனை போலீசார் பிடித்தனர். விசாரணையில் கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த மோகன் பாபு வயது 24, அவனுடன் வந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 25 என்பதும் தெரிந்தது செயின் பறித்து வந்ததை மோகன் பாபு ஒப்புக்கொண்டான். செயின் பறிப்பு நடந்த இடம் துவாக்குடி என்பதால் துவாக்குடி போலீசார் மோகன் பாபுவை விசாரணைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய சங்கரை தேடி வருகின்றனர்.