உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முக்குலத்தோர் ஓட்டை அள்ள பாஜ திட்டம்-அதிமுக இறங்குமா? | thevar vote bank | bjp | stalin alagiri mee

முக்குலத்தோர் ஓட்டை அள்ள பாஜ திட்டம்-அதிமுக இறங்குமா? | thevar vote bank | bjp | stalin alagiri mee

முக்குலத்தோர் ஓட்டை அள்ள பாஜ திட்டம்-அதிமுக இறங்குமா? | thevar vote bank | bjp | stalin alagiri meet சமீபத்தில் அழகிரியை மதுரையில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். மோதலை மறந்து அவர்கள் உறவாடினர். இந்த சந்திப்பை உதாரணமாக எடுத்துக்கொண்டு பழனிசாமி, பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு பாஜ அட்வைஸ் கொடுத்துள்ளது. தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் இது அவசியம் என்று பாஜ சொல்லி இருக்கிறது. இது பற்றி பாஜ வட்டாரம் கூறியது: கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணிக்கு தென்மாவட்டங்களில், எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டு கிடைக்கவில்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் போனது இதனால் தான். தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டு கணிசமாக இருக்கிறது. இந்த ஓட்டு அதிமுக பக்கம் வரவில்லை. பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவை, அதிமுகவில் மீண்டும் சேர்க்காவிட்டால், வரும் சட்டபை தேர்தலிலும், முக்குலத்தோர் ஓட்டு கூட்டணிக்கு வருவதில் பாதிப்பு ஏற்படும். இதைத் தடுக்க முக்குலத்தோர் இனத்தவரான நெல்லையை சேர்ந்த நயினார் நாகேந்திரனை, தமிழக பாஜ தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இதுபோலவே, தினகரன், பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட வேண்டும். அது நடந்தால் தென்மாவட்டங்களில் திமுகவுக்கு போகும் முக்குலத்தோர் ஓட்டு பாதிக்கும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் திமுக பொதுக்குழுவை மதுரையில் நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். மேலும், மதுரையில் வசிக்கும் தன் சகோதரர் அழகிரி வீட்டுக்கும் சென்று நலம் விசாரித்தார். திமுகவின் தென் மண்டல செயலராக இருந்த அழகிரி, ஸ்டாலின் உடன் ஏற்பட்ட மோதலால், 2014ல் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது, அவரை ஸ்டாலின் சந்தித்ததால், அழகிரி ஆதரவாளர்கள் மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட உள்ளனர். திமுக இதுபோன்று, எங்கெல்லாம் பின்னடைவு ஏற்படுகிறதோ, அதை சரிசெய்யும் நடவடிக்கையை உடனுக்குடன் எடுத்து வருகிறது. ஆனால், தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பின்னடைவாக இருப்பது, பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுகவில் இல்லாதது தான். அவர்களை சேர்த்தால், முக்குலத்தோர் ஓட்டுகளில் 60 சதவீதத்துக்கு மேல் அதிமுகவுக்கு கிடைக்கும். எனவே, திமுகவை பின்பற்றி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவை, அதிமுகவில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர்களையும் ஏற்று, கூட்டணி தலைவரான பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பாஜ மேலிடம் ஆலோசனை வழங்கி உள்ளது என்று பாஜ வட்டாரம் கூறியது.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை