உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருமணம் தாண்டிய உறவால் நடந்த விபரீதம் | Krishnagiri | Krishnagiri Police

திருமணம் தாண்டிய உறவால் நடந்த விபரீதம் | Krishnagiri | Krishnagiri Police

திருமணம் தாண்டிய உறவால் நடந்த விபரீதம் | Krishnagiri | Krishnagiri Police கிருஷ்ணகிரி தேசுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், வயது 45. நாடக கலைஞர். கிருஷ்ணகிரி பழைய சப் - ஜெயில் ரோட்டில் சலவை கடை நடத்தி வந்தார். இவருக்கும் தடத்தரை கிராமத்தை சேர்ந்த சின்ன நரசிம்மன் என்பவரின் மனைக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதை அறிந்த சின்ன நரசிம்மன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவரது மனைவியிடம் வெங்கடேசன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சின்ன நரசிம்மன் தனது மனைவியுடன் பழகிய வெங்கடேசனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். கடந்த சில நாட்களாக அவரது மனைவியின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தார். ஞாயிறன்று மதியம் சின்ன நரசிம்மனின் மனைவி கடைவீதிக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இவரும் ரகசியமாக பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது மறைவான இடத்தில் காத்திருந்த வெங்கடேசன், சின்ன நரசிம்மனின் மனைவியை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இதனை கண்டு உச்சகட்ட ஆத்திரத்தில் இருந்த சின்ன நரசிம்மன் இருவரையும் பின் தொடர்ந்து சென்றார். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே அவர்கள் சென்ற பைக்கை மறித்தார். வெங்கடேசனை கீழே இழுத்து தள்ளி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில் அரங்கேறிய கொடூரத்தை கண்டு சுற்றி இருந்தவர்கள் பதறினர். முகம், வாய், நெற்றி, கையில் வெட்டு காயங்களுடன் வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் துடித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பிடல் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதையடுத்து நான் தான் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்ட சின்ன நரசிம்மன் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த கிருஷ்ணகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை