ஸ்டாலின், பழனிசாமி மாறி மாறி தாக்கு mk stalin| palanisamy| eps| admk| dmk
ஸ்டாலின், பழனிசாமி மாறி மாறி தாக்கு mk stalin| palanisamy| eps| admk| dmk தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றும்போது, காவிரி நீரை பெற பல்வேறு நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி. காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது திமுகதான் எனக்கூறினார். கடந்தண்டு 70 கோடியில் மினி டைடல் பார்க் தஞ்சையில் திறக்கப்பட்டது. கும்பகோணம்-மன்னார்குடி சாலைப்பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது. மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, தம்முடைய உட்கட்சி மற்றும் கூட்டணி பிரச்னையை மறைப்பதற்காக அரசியல் அறிக்கை வெளியிடுகிறார். அந்த அறிக்கையை கூட, செய்திகளை முழுமையாக படிக்காமல் அரைவேக்காட்டு தனமாக இபிஎஸ் வெளியிடுகிறார் என ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். அவரது அறிக்கை; திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல. அரைவேக்காட்டு தனம் என்பது எது தெரியுமா முதல்வர் அவர்களே? ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப்போகிறேன். இதை செய்யப்போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே அதுதான் அரைவேக்காட்டுத்தனம். தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்தது பாசிச மாடல் தானே? முரசொலி தவிர எந்த பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத ஸ்டாலின், நான் செய்தி தாள் படிப்பது இல்லை என்று சொல்கிறார். எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டு இருக்கும் உங்களுக்கு இருக்கும் பெட்டி மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம். உட்கட்சி, கூட்டணி பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா? ஆக, ஒன்றும் தெரியாத முதல்வர் என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார் என்று பழனிசாமி கூறியுள்ளார்.