கேரளாவில் நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானம்: நடந்தது என்ன? | Emergency Landing | British f35 fighter
கேரளாவில் நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானம்: நடந்தது என்ன? | Emergency Landing | British f35 fighter jet பொதுவாக சர்வதேச கடல் பகுதியில் எல்லா நாடுகளை சேர்ந்த கடற்படையும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் பிரிட்டிஷ் கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்கள் அரபிக்கடல் பகுதியில் ரோந்து சென்றன. கடந்த சனியன்று அந்த கப்பலில் இருந்து புறப்பட்ட F-35 ரக போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதையும், மீண்டும் போர் கப்பலுக்கு செல்ல போதுமானதாக இருக்காது என்பதையும் பைலட் கவனித்துள்ளார். வேறு வழியில்லாமல் அருகில் உள்ள கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச ஏர்போர்ட்டில் தரை இறங்க அனுமதி கோரினார். உடனடியாக இந்தியா தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது. விமானம் சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி செய்ய ஏர்போர்ட் அதிகாரிகள் அவசர நிலையை அறிவித்தனர். பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்து இறங்கிய பைலட் மைக் அங்கிருந்து துளி கூட நகரவில்லை. ஏர்போர்ட் உள்ளே வர வேண்டும். சில சட்ட நடைமுறைகள் இருக்கிறது என இந்திய அதிகாரிகள் அழைத்துள்ளனர். ஆனால் எதுவும் வேண்டாம் என கூறிய அவர் போர் விமானம் அருகிலேயே சேர் போட்டு அமர்ந்தார். அவரது உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரும் வரையில் போர் விமானம் அருகிலேயே மணிக்கணக்கில் காத்திருந்தார். உத்தரவு வந்ததும் ஏர்போர்ட் உள்ளே சென்று சட்ட நடைமுறைகளை முடித்தார். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் இருப்பது தெரியவந்ததுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்த அந்த வகை போர் விமானம், குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் இல்லை. இந்த F-35 ரக விமானம், குறுகிய தூரத்தில் டேக் ஆப் ஆகி, செங்குத்தாக தரையிறங்கும் திறன்களுக்கு பெயர் பெற்ற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் ஆகும். அதில் இருக்கும் ஆயுதங்கள், தொழில்நுட்ப ரகசியங்கள் வெளியில் போய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் பைலட் அவ்வாறு நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய விமானப்படை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. F 35 போர் விமானம் தரையிறங்கியது ஒரு சாதாரண சம்பவமே. தேவையான அனைத்து உதவிகளும் இந்திய விமானப்படையால் ஒருங்கிணைந்த முறையில் செய்து தரப்பட்டன. போர் விமானத்துக்கு தேவையான எரிபொருள், விமான நிலைய நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.