ஸ்டாலினை பாராட்டிய ஆப்ரிக்கா மக்களின் பின்னணி | MK Stalin | Tanzania
ஸ்டாலினை பாராட்டிய ஆப்ரிக்கா மக்களின் பின்னணி | MK Stalin | Tanzania தமிழக அரசு பழங்குடியினருக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்து, தன்சானியா நாட்டு பழங்குடியின மக்கள் நடனம் ஆடி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்னதாக தகவல் வெளியானது. தான்சானியாவில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் சுகுமார் மூலம் அவர்களுக்கு இது குறித்து தெரிய வந்ததாக கூறப்பட்டது. தன்சானியா பழங்குடியின மக்கள் நடனமாடிய அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்திருந்தனர். இந்த காட்சிகள் வெளியானதும் தன்சானியா பழங்குடியினரே தாமாக முன் வந்து முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னது போல சமூக ஊடங்களில் பதிவிடப்பட்டது. ஆனால் உண்மை நிலை வேறு விதமாக உள்ளது. ஸ்டாலின் படத்தை வைத்து நடனம் ஆடியவர்கள் வாடகை ஆட்டக்காரர்கள் என தெரியவந்தது. இவர்களை இணைய தளம் மூலம் புக் செய்து கொள்ளலாம். 50 டாலர், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 4000 ரூபாய் கொடுத்தால் போதும். யார் புக் செய்தாலும் ஆட வருவார்கள். அவர்களிடம் வேண்டிய படங்களை கொடுத்து கேட்டபடி ஆட வைக்கலாம். அப்படிதான் முதல்வர் ஸ்டாலின் படத்தையும் கையில் கொடுத்து ஆட வைத்துள்ளனர். ஆனால் இங்கே அதனை தன்சானியா பழங்குடி மக்களே தாமாக முன்வந்து நன்றி தெரிவித்தது போல பகிரப்பட்டு வருகிறது. இது விளம்பரத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.