உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கமெனி கதை முடிப்பது பற்றி டிரம்ப் பகீர் | US vs Iran | Trump vs Ali Khamenei | israel vs iran | idf

கமெனி கதை முடிப்பது பற்றி டிரம்ப் பகீர் | US vs Iran | Trump vs Ali Khamenei | israel vs iran | idf

கமெனி கதை முடிப்பது பற்றி டிரம்ப் பகீர் | US vs Iran | Trump vs Ali Khamenei | israel vs iran | idf ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்று இஸ்ரேலும், அதன் கூட்டாளியான அமெரிக்காவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. உடனே ஈரானின் அணு ஆய்வு கூடங்களை குறி வைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதலை துவங்கியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலை தாக்கியதால் மிகப்பெரிய போர் வெடித்தது. இரு நாடுகளும் மாறி மாறி தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் 28 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரம் ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அணு கட்டமைப்புகள், ராணுவ தளங்களில் ஈரான் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. அதோடு முக்கியமான அணு விஞ்ஞானிகள், பிராதன படை தளபதிகளையும் ஈரான் இழந்தது. எல்லாவற்றுக்கும் மேல் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனிக்கும் இஸ்ரேல் குறி வைத்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. கமெனியை குறி வைக்கிறீர்களா என்று நெதன்யாகுவிடம் கேட்ட போது அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதே போல் இஸ்ரேலின் ராணுவ அமைச்சரும் கமெனிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். இதற்கிடையே இஸ்ரேல் கொலை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டதால், கமெனி பதுங்கு குழிக்கு சென்று விட்டார். ஈரானின் வடகிழக்கு நகரில் அவர் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இஸ்ரேலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் கமெனிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கனடாவில் துவங்கிய ஜி7 மாநாட்டில் இருந்து அவசர அவசரமாக அமெரிக்கா திரும்பிய டிரம்ப், எந்தவித நிபந்தனையும் இன்றி தங்களிடம் ஈரான் சரண் அடைய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை: ஈரானின் உச்ச தலைவர் என்று சொல்லப்படும் நபர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று எங்களுக்கு துல்லியமாக தெரியும். அவர் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார். ஆனால் அவர் எங்களுக்கு மிகவும் சுலபமான இலக்கு. ஆனால் அவரை நாங்கள் கொலை செய்யப்போவதில்லை. அட் லீஸ்ட் இப்போதைக்கு கொல்லப்போவதில்லை. அதே நேரம் அப்பாவி மக்கள் மீதும் அமெரிக்க வீரர்கள் மீதும் ஏவுகணை வீசுவதை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம். எங்கள் பொறுமை ஓர் அளவுக்கு தான். நிபந்தனையின்றி ஈரான் சரண் அடைய வேண்டும் என்று அந்த அறிக்கையில் டிரம்ப் எச்சரித்து உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் சொத்துக்கள் மீதோ, ராணுவ தளங்கள் மீதோ அல்லது இஸ்ரேல் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் தான் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை வீசியது. இது தான் டிரம்பின் கோபத்தை உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது. அணு ஆயுதம் தொடர்பான விவகாரத்தில் ஈரான் அமெரிக்காவிடம் சரண் அடைய வேண்டும் என்று இப்போது அவர் எச்சரித்து உள்ளார். இதற்கு ஈரான் செவி கொடுக்காத பட்சத்தில் இஸ்ரேலுடன் சேர்ந்து நேரடியாக அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக களம் இறங்க கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை