சார்தாம் புனிதப்பயணம் வநத பக்தர்கள் நடுவழியில் கடும் அவதி Landslide at Kedarnath
சார்தாம் புனிதப்பயணம் வநத பக்தர்கள் நடுவழியில் கடும் அவதி Landslide at Kedarnath | Uttarakhand Landslide| Chardham Yatra| நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள்வதற்காக உத்தராகண்ட் நோக்கி படையெடுத்துள்ளனர். உத்தராகண்ட்டின் பல பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருவதால், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களுக்கு செல்லும் பாதைகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலை மார்க்கமாக கேதார்நாத் செல்லும் வழித்தடங்கள் ஆபத்தானவையாக உள்ளன. நடந்தோ, வாகனங்களிலோ சாலை மார்க்கமாக செல்ல முடியாத பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் செல்கின்றனர். எனினும் மோசமான வானிலையால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கேதார்நாத் கோயிலுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர்கள் 5 முறை விபத்தில் சிக்கின. இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து, 2 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலைப்பாதை வழியாக கேதார்நாத்துக்கு செல்லும் வழியில் ஜங்கல்சட்டி என்ற இடத்தில் இன்று காலை 11 மணிக்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து பாறைகள் உருண்டன. மண் சரிந்தது. நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 5 பக்தர்கள் ஆழமான பள்ளத்தில் விழுந்தனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்பு பணியை முடுக்கி விட்டது. பேரிடர் மீட்புப்படைவீரர்கள் 3 பேரை உயிருடன் மீட்டனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. சிக்கிய எஞ்சிய இருவர் இறந்து போயிருந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. உத்தராகண்ட்டில் மோசமான வானிலை நிலவுவதால், ஹெலிகாப்டர் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சாலையில் அடிக்கடி நிலச்சரிவும் ஏற்படுகிறது. சாலை வழியாகவும், ெஹலிகாப்டர் மூலமும் சார்தாம் புனிதப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உத்தராகண்ட் வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க உத்தராகண்ட் மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.