உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை தேடுகிறது போலீஸ் | Coimbatore | Temple idols damaged | Investigatio

சாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை தேடுகிறது போலீஸ் | Coimbatore | Temple idols damaged | Investigatio

சாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை தேடுகிறது போலீஸ் | Coimbatore | Temple idols damaged | Investigation கோவை, சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. இன்று காலை கோயில் பூசாரி நடை திறக்க வந்த போது உள்ளே விநாயகர், ராகு, கேது உள்ளிட்ட சிலைகள் உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் பரவி ஏராளமான மக்கள் குவிந்தனர். எஸ்பி தங்கராமன் தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு செய்து தடயங்களை கைப்பற்றினர். கோயிலை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தெய்வ விக்ரகங்களை சேதப்படுத்திய ஆசாமிகளை தேடி வருகின்றனர். பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்கு போலீசார் போடப்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். நூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்பகுதி மக்கள் காலங்காலமாய் வணங்கி வரும் கோயிலின் சிலைகளை உடைத்து, சமூகப் பதற்றம் ஏற்படுத்துவதே நோக்கமாகத் தெரிகிறது. உடனடியாக சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறி உள்ளார்.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி