உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவை அறிய அந்நிய மொழிகள் உதவாது Amit shah |Home Minister of India |Book releasing function | De

இந்தியாவை அறிய அந்நிய மொழிகள் உதவாது Amit shah |Home Minister of India |Book releasing function | De

இந்தியாவை அறிய அந்நிய மொழிகள் உதவாது Amit shah |Home Minister of India |Book releasing function | Delhi முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி Ashutosh Agnihotri எழுதிய நானே துளி, நானே கடல் Main Boond Swayam, Khud Sagar Hoon என்ற நூல் வெளியீட்டு விழா டில்லியில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நூலை வெளியிட்டு பேசினார். ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் அளவுக்கான சமூகம் வெகு விரைவில் நமது நாட்டில் உருவாகும். அது வெகு தொலைவில் இல்லை. உறுதிமிக்கவர்களால் மட்டுமே அத்தகையை மாற்றத்தை கொண்டுவர முடியும். நமது நாட்டில் உள்ள மொழிகள் அனைத்தும் நமது கலாசாரத்தின் மேல் உள்ள அணிகலன்கள். நமது மொழிகள் இல்லாமல் நாம் உண்மையான இந்தியர் என்ற உணர்வைப் பெற முடியாது. நமது நாடு, கலாசாரம், வரலாறு, மதங்களை புரிந்துகொள்ள எந்த அந்நிய மொழியும் போதுமானது கிடையாது. அரைவேக்காட்டுத்தனமான அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அதை நோக்கிய போர் மிகவும் கடினம் என்பது எனக்கு தெரியும். அதே சமயம் இந்திய சமூகம் அதை வென்றெடுக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. நமது நாட்டை நமது மொழிகளை கொண்டு மீண்டும் வழி நடத்துவோம். உலகையும் வழி நடத்துவோம். இந்தியாவின் அமிர்த காலத்தை அடைய பிரதமர் மோடி 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டுள்ளார். வளர்ந்த இந்தியாவை அடைவது, அடிமைத்தனத்தின் ஒவ்வொரு தடயத்தையும் அகற்றுவது, நமது பாரம்பரியத்தில் பெருமைகொள்வது, ஒற்றுமையுடன் இருப்பது, ஒவ்வொரு இந்தியரிடமும் அவருடைய கடமை உணர்வை தூண்டுவது என 5 உறுதிமொழிகளை கூறி உள்ளார். இந்தியர்கள் அதை அவர்களுடைய உறுதிமொழிகளாக எடுத்துக்கொண்டு உள்ளனர். அதன் காரணமாக 2047ல் நாம் உலகில் மிக உச்சத்தில் இருப்போம். நமது மொழிகளும் அந்த பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அமித்ஷா கூறினார்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ