உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூடுவிழா நடத்தினால் எதிர்ப்பு கிளம்பும் என கல்வியாளர்கள் ஆலோசனை! TN School Education | Single Digit

மூடுவிழா நடத்தினால் எதிர்ப்பு கிளம்பும் என கல்வியாளர்கள் ஆலோசனை! TN School Education | Single Digit

மூடுவிழா நடத்தினால் எதிர்ப்பு கிளம்பும் என கல்வியாளர்கள் ஆலோசனை! TN School Education | Single Digit Students | DMK அரசு வழங்கும் நலத்திட்டங்களால் கல்வி தரம் உயர்ந்து, ஆரம்ப பள்ளிகளில் இந்தாண்டு 3.12 லட்சம் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழலையர் வகுப்புகளில் 22,757 குழந்தைகள் சேர்ந்துள்ளனர் என கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேநேரம் பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் இன்னும் மாணவர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. கொடைக்கானலில் சமீபத்தில் நடந்த தொடக்க கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டம் வாரியாக ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி விவரங்களை சேகரிக்கும்படி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பட்டியல், ஆசிரியர்கள் வாட்ஸாப் குழுக்களில் பரவி வருகிறது. இது ஆசிரியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சியில் ஒற்றை இலக்க மாணவர் பள்ளிகளை, அருகே உள்ள அரசு பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சி நடந்தது. அதற்கு அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் முயற்சி கைவிடப்பட்டது. தற்போது அதுபோல் பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவிட்டதன் வாயிலாக, அதிகாரிகள் பரிந்துரையால் ஒற்றை இலக்க மாணவர் அரசு பள்ளிகளை மூடும் முயற்சி நடக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் எங்கு பேசினாலும், கல்வியும், சுகாதாரமும் தி.மு.க. ஆட்சியின் இரு கண்கள் என்கிறார். அமைச்சர் மகேஷ், அரசு பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என்கிறார். அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்களை அரசு வெளியிடுகிறது. ஆனால் மாணவர் எண்ணிக்கை ஒற்றை இலக்கம் கொண்ட பள்ளிகள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் பள்ளிகளில் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகளின் தவறான ஆலோசனைகளால் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தினால் எதிர்ப்பு கிளம்பும், என அவர்கள் கூறினர்.

ஜூன் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை