உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு சோகம் | Namakkal | Police |

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு சோகம் | Namakkal | Police |

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு சோகம் | Namakkal | Police | நாமக்கல் வெப்படை அடுத்துள்ள பாதரை பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி கண்ணம்மாள், வயது 80. அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இன்னொரு மகன் கண்ணம்மாள் வீட்டின் அருகில் குடியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் அனைவரும் கோயிலுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து எதிர்வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சங்கர் என்பவன் மூதாட்டி வீட்டுக்குள் நுழைந்துள்ளான். அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்தான். அப்போது மூதாட்டி சத்தம் போடவே, அவரது வாய்க்குள் புகையிலை, துணியை திணித்துள்ளான். அந்த நேரம் பார்த்து கண்ணாம்மாளின் மருமகள் சாவி வாங்க அங்கே வந்துள்ளார். கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அதனால் கதவு சந்து வழியே உள்ளே எட்டி பார்த்துள்ளார். அப்போது சங்கர் மூதாட்டி கழுத்தை நெறித்தது தெரிந்துள்ளது. அலறிய அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். ஊர் மக்கள் ஒன்று திரண்டு சங்கரை கையும் களவுமாக பிடித்தனர். வெப்படை போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது. ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் சங்கரை கைது செய்தனர். அவனிடம் இருந்து முக்கால் சவரன் தங்க நகை மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட மூதாட்டி உடல் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடக்கிறது.

ஜூன் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி